அணு ஆயுதங்களை கையாளும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரச்சார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்காவுக்கு சவால் விடுத்துவரும் சீனாவையும், ரஷியாவையும் விமர்சனம் செய்தார்.
மேலும் பாகிஸ்தான் எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று என்றும் தெரிவித்தார். உலகை முன் எப்போதும் இல்லாத இடத்திற்கு எடுத்து செல்லும் திறன் அமெரிக்காவிற்கு உள்ளது என்றும் பெருமிதம் கூறினார்.

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் முழுமையான தோல்வியை இது காட்டுகிறது என்று ஜோ பைடனின் பேச்சுக்கு, ஷேபாஸ் ஷெரீப் பொறுப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பிடனின் கருத்துக்களைத் தொடர்ந்து தற்போதைய அரசாங்கம் திறமையின்மைக்கான அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளதாக அவர் டிவீட் செய்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்







