முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

நோபல் பரிசு உருவான கதை


ரேணுகா தேவி

நாட்டு மக்களுக்காக போராடும் ராணுவ வீரருக்கு வீரதீர செயலுக்கான விருது, திரைத்துறை கலைஞர்களுக்கு ஆஸ்கர் எனும் உயரிய விருது, விளையாட்டு வீரர்களுக்கான ஒலிம்பிக் விருது, சிறந்த பத்திரிகையாளருக்கான புலிட்சர் விருது, சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் விருது என உலகம் முழுவதும் கவனிக்கப்படும் சர்வதேச விருதுகள் ஏராளம். ஆனால் விருதுகளுக்கு எல்லாம் விருதாக திகழ்வதென்றால் அது நோபல் பரிசுதான்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் நோபல் பரிசு உலகம் முழுவதும் கவனிக்கப்படும் முதன்மையான விருதாக உள்ளது. அதன்படி இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோபல் பரிசு கமிட்டி ஆண்டுதோறும் விஞ்ஞானியும் மாபெரும் செல்வந்தருமான ஆல்பர்ட் நோபல் நினைவாக நோபல் பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான நோபல் பரிசின் முதல் அறிவிப்பாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு ((Svante Paabo)) அறிவிக்கப்பட்டது. தற்கால மனிதனின் மூதாதையர்களாக கருதப்படும் ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றிய ஸ்வாந்தே பாபோவின் கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் துறையில் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மனித குலம் எவ்வாறு உருவானது? தற்போது உள்ள மனித இனத்திற்கும் அதற்கு முந்தைய மூதாதையருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் என்ன? என்பது குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக மனிதனுடைய மரபணுவான டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் கட்டமைப்பை ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்ஸ் க்ரிக், ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் ஆகியோர் கண்டறிந்தபோது மனிதனுடைய உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டதாக உலகமே கொண்டாடியது. உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதன் வரலாறு, கடந்து வந்த பாதை போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் அதற்குப் பின்வந்த தலைமுறை அறிவியலர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஒரு அரிய கண்டுபிடிப்பாக மரபணுவியலர் ஸ்வாந்தே பாபோ நிகழ்த்திய கண்டுபிடிப்புகள் உள்ளன. அவருடைய ஆராய்ச்சியில் மனித டிஎன்ஏக்களை ஆய்வுசெய்து மனித இன வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த பல புதிர்களை அவிழ்த்ததற்காக அவருக்கு, உடற்செயலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனில் 1955ல் பிறந்த ஸ்வாந்தே பாபோவின் தந்தையான சூனெ பேர்ஸ்ட்ரோம், 1982ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ((ஆனால் திருமணத்துக்கு வெளியிலான உறவின் விளைவாக பிறந்த)) ஸ்வாந்தே பாபோவுக்கு அவரின் தந்தையான சூனெ பேர்ஸ்ட்ரோமுடன் சிறுவயதிலிருந்தே எந்த தொடர்புமும் இல்லாமல் இருந்த நிலையில் தாய் கிரேன் பாபோவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

“மருத்துவம் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்து தனது விருப்பத்தின் பேரில் மேற்கொண்ட தன்னிச்சையான ஒரு முடிவே” என்று கூறுகிறார் ஸ்வாந்தே பாபோ. தன் ஆரம்பகாலத்தில் எகிப்தின் வராலாறு, மொழி, கலாச்சாரத்தை உள்ளடக்கிய எகிப்தியலில் நாட்டம் கொண்டிருந்தார் ஸ்வாந்தே, அதன்பிறகு மரபணுவியல் (Genetics) மற்றும் பரிணாம மானுடவியல் (Evolutionary Anthropology) ஆகியவற்றை நோக்கி நகர்ந்தார்.

1986ல் உப்பசாலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் அவர், மனித உடலில் உள்ள நோய்த்தடுப்பாற்றல் மண்டலத்தின் மீது அடினோவைரஸின் ‘ஈ-19’ புரதம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். பிறகு ஜூரிக் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் ஆய்வு மேற்கொண்டார். பின் 1987 முதல் 1990 வரை அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

அதன்பின்னார் Paleogenetics என்றழைக்கப்படும் தொல்மரபணுவியல் என்ற புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர்களுள் ஸ்வாந்தே பேபுவும் ஒருவராக உயர்ந்தார். பொதுவாக தொல்லியல் துறையில் ஒரு இடத்தில் அகழாய்வு செய்து அந்த இடத்தில் இருந்த பழைய நாகரிகங்களின் வரலாற்றைக் கண்டறிவதுபோல், உயிரினங்களின் டிஎன்ஏக்களை அகழாய்வு செய்து அவற்றின் தொல்லியல் வரலாற்றைக் கண்டறிவதுதான் தொல்மரபணுவியல் துறையின் பணியாகும். இதன் அடிப்படையில் இன்றைய மனிதர்களின் அழிந்துபோன மூதாதையரான நியாண்டர்தால் மனிதரிடமிருந்து எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவில் மரபணு வரிசைப்படுத்தலை முதன்முறையாக 1997ல் வெற்றிகரமாக ஸ்வாந்தே மேற்கொண்டார்.

இதன்மூலம் இதற்கு முன்பு அறியப்படாத மனிதனின் மூதாதையர்களான ஹோமினின்களின் தன்மை குறித்து கண்டறிந்து மனிதனுடைய பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஸ்வாந்தே பாபோ. இவரின் இந்த அறிவியல் ஆராய்ச்சி மனிதனின் பரிணாம வளர்ச்சியில் புதிய வடிவத்தைத் தோற்று வித்துள்ளது. மனித பரிமாற்றத்தில் இருக்கும் மரபணுக்கள் வேற்றுமையைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதர உயிரினங்களை காட்டிலும் மனிதன் தனித்துவம் அடைந்தவன் என்பதை பிரதிபலிக்கும் விதமாக ஸ்வாந்தே பாபோவின் ஆராய்ச்சி அமைந்துள்ளது.

இதுதொடர்பாக 2008ம் ஆண்டு சைபீரியாவின் தெற்கு பகுதியில் டெனிசோவா என்ற குகையில் ஸ்வாந்தே பாபோ குழுவினர் ஆராய்ச்சியை மேற்கொண்டார். அங்கு 40ஆயிரம் வருடங்கள் பழமையான மனிதனின் கை எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மூலம் அழிந்துபோன ஹோதினின்கள் என்ற இணைத்தை அவர் கண்டுபிடித்துள்ளார். கடும் குளிர்பிரேதேசமான சைபீரியாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை அந்த கை எலும்புக்கூடு பனி பிரேதேசத்தில் இருந்த காரணத்தால், அதனுடைய டிஎன்ஏக்கள் பாதுகாப்பாக இருந்தது ஸ்வாந்தே பாபோவின் ஆராய்ச்சிக்கு பக்கபலமாக இருந்துள்ளது. அதற்கு முன்புவரை தொல்மனிதர்களின் டிஎன்ஏவை ஆராய்ச்சி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்துவந்தது. டிஎன்ஏ என்பது உயிரிப் பொருள் என்பதால் எளிதில் அழிந்துபடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. தொல்மனிதர்களின் டிஎன்ஏவுடன் பாக்டீரியாவின் டிஎன்ஏவும் நவீன மனிதர்களின் டிஎன்ஏவும் கலந்துவிடுவதால் துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை நீடித்தது.

இதனால் ஆதி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் டிஎன்ஏவைக் கொண்டு முழுமையான மரபணு வரிசையை உருவாக்கவே முடியாது என்று அறிவியல் உலகம் நம்பிவந்தது. இந்த நிலையை மாற்றியதில் ஸ்வாந்தே பேபுவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அவர் கண்டறிந்த மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளால் தொல்மனிதர்களின் டிஎன்ஏக்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்க முடிந்தது. இந்த ஆய்வின் மூலம், மனித குலத்தின் உறவினரான நியாண்டர்தால் மனிதர்களும், புதிதாகக் கண்டறியப்பட்ட ஹோமினின்களும் ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள் என்பது தெரியவந்தது.

மேலும் நியாண்டர்தால், ஹோமினின்கள் இனங்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஸ்வாந்தே பாபோவின் கண்டுபிடிப்புக்கு முன்புவரை தற்போதுள்ள மனித இனமான ஹோமோசாபியனின் மூதாதையர்களாக நியாண்டர்தால்கள் கருதப்பட்டுவந்தனர். ஆனால் ஸ்வாந்தே கண்டுபிடிப்புக்கு பிறகு ஹோமோசாபியன் முந்தைய தலைமுறையாக ஹோமினின்கள் இருந்துள்ளனர் தெளிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனித பரிணாமா வளர்ச்சியில் ஸ்வாந்தேவின் கண்டுபிடிப்புகள் அடுத்தகட்ட ஆராய்ச்சிகளை நோக்கி நகர்த்தியுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்ததாக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த ஆலென் ஆஸ்பெ (Alain Aspect), அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் க்ளாவ்ஸர் (John Clauser), மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டான் ஜெய்லிங்கர் (Anton Zeilinger) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இந்த மூன்று அறிவியலாளர்களும் அணுவின் உள் உலகு குறித்த அடிப்படை விசைகள் தொடர்பான குவாண்டம் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அவர்களுடைய ஆராய்ச்சியில் குவாண்டம் பிணைப்பிலுள்ள இரண்டு எலெக்ட்ரான்கள் வெகு தொலைவில் இருந்தாலும் ஒளியின் வேகத்தைவிட அவைகளால் தங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் செய்துகொள்முடிகிறது என கண்டறிந்தனர். அதனை இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் பிரிக்கப்பட்ட குவாண்டம் எலெக்ட்ரான்கள் ஒளியின் வேகத்தைவிட அதிவிரைவாக பயணிக்கிறது என்பதுதான். இதற்கு முன்புவரை விஞ்ஞானி ஐன்ஸ்டைனின் கூற்றுப்படி ‘இந்த பிரபஞ்சத்தில் ஒளியின் வேகம்தான் உச்சபட்சம் என திட்டவட்டமாக தெரிவித்தார். ((ஆனால் அதனை தற்போது ஆலென் ஆஸ்பெ, ஜான் க்ளாவ்ஸர் மற்றும் ஆன்டான் ஜெய்லிங்கர் ஆகியோர் பெய்யான நிரூபித்துள்ளனர்.)) இந்த கண்டுபிடிப்புக்காக பல்லாண்டுகாலமாக அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு ஒளியைவிட குவாண்டம் எலெக்ட்ரான்கள் அதிவேகமாக பயணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

குவாண்டம் பிணைப்பின் அடிப்படைத் தன்மைகளுள் ஒன்று வெகு தொலைவில் ஒளியின் வேகத்தை விஞ்சித் தகவல் அனுப்புவது என்பதால் தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் அது மிகப் பெரிய புரட்சிகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும் குவாண்டம் தொடர்பான ஆராய்ச்சியின் மூலம் கரும் பொருள் ((dark matter)), ஈர்ப்பு விசை போன்றவை குறித்து மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அடுத்ததாக, Supercomputer நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கணக்கை குவாண்டம் பிணைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் குவாண்டம் கணினி ஒரு சில நொடிகளில் செய்துமுடித்துவிடும் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பான தனிப்பட்ட குவாண்டம் துகள் அமைப்புகளின் சிறப்பு பண்புகளைப் பயன்படுத்தி தீவிர ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்தாண்டுக்கான உலகின் உயரிய விருதான நோபல் பரிசு மருத்துவம் மற்றும் இயற்பியல் துறை அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, வேதியியலுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்தது.அதன்படி 2022ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி கரோலின் ஆர்.பெர்டோஸி, மார்டன் மெல்டால் மற்றும் கே. பெரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. “கிளிக் கெமிஸ்ட்ரி” மற்றும் பயோ-ஆர்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சி மற்றும் “பாரி ஷார்ப்லெஸ், மோர்டன் மெல்டால் வேதியியலின் செயல்பாட்டு வடிவத்திற்கு அடித்தளம் அமைத்ததுள்ளனர். இதன் மூலக்கூறு கட்டுமான தொகுதிகள் விரைவாகவும் திறமையாகவும் ஒன்றிணைக்கும் ஆராய்ச்சிகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படும் 8-வது பெண் என்ற பெருமை கரோலின் ஆர்.பெர்டோஸிக்கு கிடைத்துள்ளது. இது ஒருபுறம் பெருமையான விஷயமாக பார்க்கப்பட்டாலும் 121 ஆண்டுகள் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசில், தற்போதுதான் வேதியியல் துறையில் 8வது முறையாக பெண் விஞ்ஞானி ஒருவருக்கு பரிசு வழங்கப்படுவதை விமர்சன ரீதியாகவும் பார்க்கவேண்டியுள்ளது. அதேபோல் பெண்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என தன் அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகிற்கு உணர்த்தியவர் விஞ்ஞானி மேரி க்யூரி.

நோபல் பரிசு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மேரி க்யூரி கண்டுபிடித்த யுரேனியம், பொலோனியம் ஆகிய தனிமங்களுக்கு 1903ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1911ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றார். இதன்மூலம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞாணியாகவும், இயற்பியல் மற்றும் வேதியல் என இரு துறைகளிலும் நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் விஞ்ஞாணியாகவும் உள்ளார் மேரி க்யூரி. அதேபோல் தற்போதுவரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 60 பெண்களுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசுகளிலேயே மிகவும் மதிக்கப்படும் விருதான அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணபடுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அலெஸ் பியாலியாட்டிஸிற்கும், ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடங்கியதில் இருந்து நடக்கும் போர்க் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து உலக அரங்கில் எடுத்துரைத்து வந்த ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகத்திற்கும் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளபெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்யன் மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் (Russian human rights organisation Memorial) மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு (Ukrainian human rights organisation Center for Civil Liberties) என இரு அமைப்புகளிலும் பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெஸ் பியாலியாட்ஸ்கி பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். சர்வாதிகாரிக்கு இணையான அதிகாரத்தை அதிபருக்கு அளிக்கும் நோக்கில் பெலாரசில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தியவர். இதற்காக, வியாஸ்னா என்ற அமைப்பை உருவாக்கியவர். அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக 2011 முதல் 2014 வரை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை அடுத்து 2020ல் மீண்டும் இவர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணையின்றி இவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், தனது நோக்கத்தில் சமரசமின்றி செயல்பட்டு வரும் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது பலரின் பாராட்டைப் பெற்றது.

அதேபோல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு 82 வயதான பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரான ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டது. நவீன பிரான்ஸ் நாட்டின் சமூக வாழ்க்கையின் உள்ளார்ந்த விஷயங்களை ஆனி எர்னாக்ஸ் தனது நுட்பமான எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள ஆனியின் பல புத்தகங்கள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பல ஆண்டுகளாக பாடப் புத்தகங்களாக இருக்கின்றன. தனது சொந்த வாழ்க்கையையும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய பிரெஞ்சு சமூக வாழ்க்கையையும் ஆனி தனது படைப்புகளில் கலை நுட்பத்தோடு எடுத்துரைக்கிறார். தமது புத்தகங்களில் தனது வாழ்க்கையின் பதின் பருவம், திருமணம், அபார்ஷன், காதல், மார்புப் புற்று நோய், பெற்றோரின் மரணம் என்று அனைத்தைப் பற்றியும் எழுதத் தொடங்கினார்.

அவரது சொந்த வாழ்க்கையை ஒரு புதைபொருள் ஆய்வாளரைப் போல ஆராய்ந்தார். இவர் 2008இல் எழுதிய Les Années வரலாற்று ரீதியான நினைவுக் குறிப்புகள் புத்தகம் இவரது மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான பிரான்சின் வரலாற்றை விவரிப்பதுடன், ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அவள் வாழ்ந்த சமூகத்தையும் துல்லியமாக வர்ணிக்கிறது. மேலும் 1901ம் ஆண்டு முதல்தான் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுவரை 119 பேருக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருதை ஆனி எர்னாக்ஸ் உட்பட மொத்தம் 17 பெண்கள் தற்போதுவரை பெற்றுள்ளனர்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை தொடர்ந்து மிக முக்கிய நோபல் பரிசாக கருதப்படும் பொருளாதாரத்துக்கான நோபல் விருது, வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி பற்றிய ஆய்வு மேற்கொண்டமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னான்கே, டக்ளஸ் டைமண்ட், பிலிப் எச்.டிப்விக் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோபல் பரிசு உருவாக்கப்பட்ட பொழுது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஆல்பர்ட் நோபலின் உயிலில் குறிக்கப்படவில்லை. அதன்பிறகு நோபல் பரிசு குழுவினர் 1968ம் ஆண்டில் இருந்துதான் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வழங்கிவருகிறார்கள்.

இன்றைக்கு விருதுகளின் விருதாக நோபல் பரிசு கருத்தப்படுகிறது. ஆனால் இந்த விருதுக்கு பின்னால் வரலாற்றில் மரண வியாபாரி என அழைக்கப்பட்ட ஒரு விஞ்ஞானியின் கதை அடங்கியுள்ளது. ஸ்வீடனில் மிகப்பெரிய பொறியியளாலர் குடும்பத்தில் 1833ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பிறந்தவர்தான் ஆல்பர்டு நோபல். அறிவியில் விஞ்ஞானியான ஆல்பர்ட் நோபலின் பெயரில்தான் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

தன்னுடைய 17 வயதுவரை வீட்டு கல்வி முறையில் பயின்ற ஆல்பர்ட் நோபல், இயற்பியல், வேதியியல், இயற்கை அறிவியியல், மொழியியல் மற்றும் இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அதேபோல் ஸ்வீடிஷ், ரஷ்யன், ஃப்ரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ஆகிய 5 மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் கற்றிருந்தார். குறிப்பாக கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்த ஆல்பர்டு நோபலை, அவரின் தந்தை பாரிஸில் புகழ் பெற்ற வேதியியல் நிபுணரான Professor T. J. Pelouzeயிடம் வேதி பொறியியல் படிக்க அனுப்பினார். அங்குதான் இளம் இத்தாலிய வேதியியளாலரான Ascanio Sobreroவுடன் ஆல்பர்டு நோபலுக்கு அறிமுகம் கிடைத்தது. பின்னாளில் Ascanio Sobrero பல மடங்கு ஆற்றலை கொண்ட நைட்ரோ க்ளிசரனை கண்டுபிடித்தார். பின்னர் டைனமைட் எனும் வெடி பொருளை உருவாக்கினார் ஆல்பர்ட் நோபல். தொடர்ந்து detonatorஐயும் அவர் கண்டறிந்தார்.

தொடக்கத்தில் ஆல்பர்ட் நோபல் கண்டுபிடித்த வெடி பொருட்கள் கட்டிடங்கள், பாலங்கள், தங்கம் மற்றும் வைர சுரங்கங்களை உடைக்க பயன்பட்டது. ஆனால் பின்னாளில் அவை முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு பல உயிர்களைக் குடிக்க ஆரம்பித்தன. இதுபோன்ற ஏராளமான வெடி பொருட்களை உற்பத்தி செய்ய ஐரோப்போவில் உள்ள 20 நாடுகளில் மொத்தம் 90 தொழிற்சாலையை நிறுவினார் நோபல். இதற்கிடையில் ஆல்பர்டின் தொழிற்சாலை விபத்தில் இவரது சகோதரர் எமில் நோபல் மரணமடைந்தார். ஆனால், ஆல்ப்ரட் இறந்ததாக நினைத்து, செய்திதாள்களில் ‘மரண வியாபாரி இறந்துவிட்டார்’ என்று செய்தி வெளியானது. இதனை கண்ட ஆல்பரட் நோபல் உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வுக்கு ஆளானார்.

இதன்காரணமான தன்னுடைய கண்டுபிடிப்புகள் மூலம் பெற்ற சொத்தை வைத்து நோபல் பரிசை நிறுவினார். 1896ல் பெருமூளை ரத்த கசிவின் காரணமாக ஆல்பர்டு நோபல் இறந்த பிறகு. அவரது விருப்பப்படி 1901ம் ஆண்டு முதல் தற்போதுவரை ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக இதுவரை மொத்தம் 954 தனிநபர்களும் 27 நிறுவனங்களும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுவிருதுடன் சுமார் 7 கோடியே 25 லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

மரண வியாபாரி என வரலாற்றில் அழைக்கப்பட்ட ஆர்பர்ட் நோபல்,தன் தவறை உணர்ந்த காரணத்தால் தற்போது தனித்துவமிக்க NOBLE மனிதராக அறியப்படுகிறார். அவரின் பெயரால் வழங்கப்படும் நேபால் பரிசு இப்பிரபஞ்ச வளர்ச்சிக்கு பாடுபட்ட நூற்றுக்கணக்கான நோபலியர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு வெளியானதுமே வழக்கம்போல் வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாகப் பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரமும் புறக்கணிப்பும் பேசுபொருளாயின. சிலரது வெற்றி கொண்டாடப்படும் அதேவேளையில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பெண்களின் பெயர்கள் நோபல் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தும் ஒலித்தது.

2019-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கும் எஸ்தர் டுஃப்லோ, அப்பிரிவில் பரிசு பெறும் இரண்டாம் பெண். இதற்கு முன், 2009-ல் எலினார் ஓஸ்ட்ரோம் என்பவருக்கு இதே பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1972-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிறந்த டுஃப்லோ, வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஷ்யாவில் சில ஆண்டுகள் பணியாற்றியபோது பொருளாதார நிபுணரிடம் உதவியாளராக இருந்தார்.

அப்போதுதான் பொருளாதாரம் மூலமாகத்தான் உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தீர்மானித்தார். 1999-ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி மையத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2002-ல் அந்தக் கல்வி மையத்தின் உதவிப் பேராசிரியரானார்.

தனது முனைவர் பட்ட ஆய்வின் மேற்பார்வையாளர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து வளர்ச்சிப் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளிலும் அவற்றின் மூலம் வறுமை ஒழிப்புக்கான வழிமுறைகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தினார். 2015-ல் டுஃப்லோவும் பானர்ஜியும் மணந்துகொண்டனர். உலக வறுமையை ஒழிக்க ஆய்வுசார்ந்த அணுகுமுறையுடன் செயல்பட்டதற்காக இந்த இணையரும் மைக்கேல் க்ரெமர் என்பவரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பவர் ஓல்கா டொகார்சுக். நடுவர் குழுவில் இருந்த ஒருவரின் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையானதால் கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

எனவே, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 1962-ல் போலந்தில் பிறந்தவரான ஓல்கா, வார்ஸா பல்கலைக்கழகத்தில் உளவியலாளராகப் பயிற்சிபெற்றவர். 1989-ல் இவர் எழுதிய ‘சிட்டீஸ் இன் மிரர்ஸ்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. 1993-ல் வெளியான ‘தி ஜர்னி ஆஃப் தி புக் பீப்பிள்’ இவரது முதல் நாவல். தொடர்ந்து பல கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ள டொகார்சுக், ‘ஃபிளைட்ஸ்’ என்கிற நாவலுக்காக 2018-ம் ஆண்டின் மேன் புக்கர் பரிசைப் பெற்றார். தேச எல்லைகளைக் கடப்பவர்களைப் பற்றி எழுதியதற்காக இவர் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நோபலும் பெண்களும்

* பெண்கள் அதிகம் பெற்றிருப்பது அமைதிக்கான நோபல் பரிசைத்தான். 17 பேருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 15 பெண்கள் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அறிவியல் பிரிவுகளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 12 பேர் பெற்றிருக்கிறார்கள். இயற்பியல், வேதியியல் பரிசுகள் தலா மூவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை இரண்டு பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.

* 1903-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் மேரி கியூரி. 1911-ல் வேதியியலுக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றார்.

* பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 54 நோபல் பரிசுகளில் இரண்டு பரிசுகளை ஒருவரே பெற்றிருப்பதால் நோபல் பரிசைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை 53.

* இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய அறிவியல் பிரிவுகளில் இதுவரை நோபல் பரிசு வாங்கிய 600 பேரில் பெண்களின் எண்ணிக்கை 19 மட்டுமே.

* 2009-ல் மருத்துவம் (2), இலக்கியம் (1), வேதியியல் (1), பொருளாதாரம் (1) என ஐந்து பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் வரலாற்றிலேயே அதிக பெண்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது அந்த ஆண்டில்தான்.

* 2015-ல் து யுயு (Tu Youyou) மருத்துவத்துக்கான நோபலைப் பெற்றார். இதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் சீனப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

* 2018-ல் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 55 ஆண்டுகள் கழித்து அப்பிரிவில் ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஃப்ரான்சஸ் அர்னால்ட் என்பவருக்கு வழங்கப்பட்டது.

விடுபடல்களின் அநீதி

1903-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு முதலில் மேரி கியூரியின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த கணிதவியலாளர் கோஸ்டா மிட்டாக்-லெஃப்லரின் தீவிர முயற்சியால்தான் மேரி கியூரியின் பெயர் சேர்க்கப்பட்டு அவருக்குப் பரிசு கிடைத்தது. பல முக்கியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் உட்படத் தகுதி வாய்ந்த பெண்கள் பலர் நோபல் பரிசுக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கான சில உதாரணங்கள்:

* கரும்பொருளை (Dark matter) 1980-களிலேயே கண்டுபிடித்த வேரா ரூபினுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்க வேண்டும். அவர் 2016-ல் இறந்தார். இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்க முடியாது என்பதால் ரூபினுக்கு நோபல் அங்கீகாரம் அளிக்காத குறையைச் சரிசெய்யவே முடியாது.

* அணுப் பிளவைக் கண்டுபிடித்ததற்காக 1944-ல் ஓட்டோ ஹானுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கண்டுபிடிப்பில் சம பங்களித்த லிசே மெய்ட்னருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1935 முதல் 1965வரை 48 முறை அவரது பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டபோதும் ஒருமுறைகூட அவருக்குப் பரிசு வழங்கப்படவில்லை. 1968-ல் அவர் இறந்துவிட்டார்.

* மரபணுவின் வடிவமைப்பைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்ஸன், ஃப்ரான்சிஸ் கிரிக், மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய ரோசலிண்ட் ஃபிராங்ளின் என்ற பெண் 1958-ல் இறந்துவிட்டதால் அவருக்கு அந்தப் பரிசு கிடைக்காமல் போனது.

* கதிர்வீச்சுத் துடி விண்மீன்களைக் (Radio pulsars) கண்டுபிடித்த ஜோஸ்லின் பெல் பர்னலுக்குப் பரிசு வழங்கப்படவில்லை. அந்த ஆராய்ச்சியின் மேற்பார்வையாளர் அந்தோணி ஹெவிஷுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

* லீன் ஹாவ், சியான்-ஷிங் வு எனத் தகுதியிருந்தும் நோபல் கிடைக்காத பெண்களின் பட்டியல் மிக நீளமானது.

* இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. கடந்த ஆண்டு இரண்டு பிரிவுகளிலும் பெண்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மருத்துவம் உட்பட மூன்று அறிவியல் பிரிவுகளிலும் ஒரு பெண்ணுக்குக்கூட நோபல் வழங்கப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

Jeba Arul Robinson

ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.க்கு எதிரான அவதூறு வழக்கு: புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Web Editor

சாலை பெயர் மாற்றத்தில் பாஜகவுக்கு சம்பந்தமா? எல்.முருகன் விளக்கம்!

EZHILARASAN D