#Viral | நெடுஞ்சாலை பெயர்ப்பலகையை ஜிம்மாக மாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ!

30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக…

30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.   இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

சினிமா பாடலுக்கு நடனமாடுவது,  சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.  அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையான  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது இளைஞர் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.