அங்காளம்மன் கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

விழுப்புரம் மேல்மலையனூரில் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும்…

விழுப்புரம் மேல்மலையனூரில் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்காக வந்து செல்கின்றனர்.  ஒவ்வொரு தமிழ் மாதமும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம்  இந்த கோயிலின் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவத்திற்காக அமாவாசையை முன்னிட்டு
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நள்ளிரவு 11மணியளவில் மகாலட்சுமி அலங்காரத்தில் அங்காளம்மனை வடக்கு வாசல் வழியாக தோளில் சுமந்து வந்து பின்னர் ஊஞ்சல் மண்டபத்திலுள்ள ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடினர்.

இதனை அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர். இந்நிகழ்வில் விழப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டார். ஊஞ்சல் உற்சவத்தை காண விழுப்புரம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.