நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு தேயிலை பறிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்குள்ள வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி ஊருக்குள் வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பருவ மழை பொய்த்துப்போன காரணத்தால் இரை மற்றும் உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள் பொதுமக்களை தாக்குவதும், கால்நடைகளை கொன்றுவிடுவதும் சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள கேசலாடா பகுதியில் தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி ஒன்று உலா வந்தது.
இதனை கண்ட அங்கிருந்த தேயிலை தோட்ட ஊழியர்கள் பதறியடித்து ஓடினர். பொதுமக்களின் சத்தத்தால் கரடி வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரடி பொதுமக்களை தாக்கும் முன்னர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







