விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் விடப்பட்டிருந்த மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மழவரயநல்லூர் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக குத்தகையை நாராயணசாமி என்பவர் எடுத்திருந்தார்.அவர் ஏரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீன்களை வாங்கி விட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் கால்நடையை மேய்ச்சல் அழைத்துச் சென்றப்போது ஏரியில் மீன்கள் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.மீன்கள் செத்து மிதப்பதால் அந்த தண்ணீரை பருகினால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கால்நடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.ஏரியில் மீன்கள் செத்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேந்தன்







