உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், அவரை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார்.
உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனுக்கு நிகராக விளையாடிய பிரக்ஞானந்தா இறுதியாக போராடி தோற்றார். இதனால் உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரில் பிரக்ஞானந்தாவின் திறமையான ஆட்டம் பலராலும் பாராட்டப்பாட்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதே போன்று முன்னாள் உலக செஸ் சாம்பியனும் தமிழருமான விஸ்வநாதன் ஆனந்தும் பிரக்ஞானந்தாவை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவர்களை தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை பாராட்டி தனது X பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
X பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டதாவது:
“நீங்கள் ‘ரன்னர்-அப்’ இல்லை பிரக்ஞானந்தா. இது தங்கத்துக்கு நிகரானது ஆகும். இது போன்ற பல போர்களில் கற்பதன் மூன் எதிர்காலத்தில் நீங்கள் போராட தயாராகியுள்ளீர்கள். உங்கள் பயணத்தில் நாங்கள் எப்போதும் உடன் இருப்போம், அதோடு ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்போம்.
இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
https://twitter.com/anandmahindra/status/1694688614808957190







