கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல்…

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பஞ்சவாடி ஆஞ்சநேயர் கோவில் பகுதிகளில் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்வதற்காக நிறுத்த முற்பட்டபோது அந்த நபர்  வேகமாக தப்பித்து செல்ல முயன்றார், உடனடியாக துரிதமாக செயல்பட்டு போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரை சோதனை செய்தததில் அவரிடம் இருந்து சுமார் 900 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை விசாரித்ததில் அவர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராமலிங்கம்(52) என்பதும் ஆரோவிற்கு சுற்றுலா வரும் பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 900 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.