முக்கியச் செய்திகள் தமிழகம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 2 ஆயிரத்த 298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 401 பகுதிகளும், சென்னையில் 244 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக தருமபுரியில் 3 பகுதிகளும், நாகப்பட்டினத்தில் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Gayathri Venkatesan

நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை

Saravana Kumar

தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்துகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு

Jeba Arul Robinson