நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 42,766 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 45,254 பேர் குணமடைந்துள்ளனர். 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,07,95,716 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,99,33,538 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் மொத்த உயிரிழப்பு 4,07,145 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,55,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது வரை நாடு முழுவதும் 42,90,41,970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை 37.21 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குணமடைவோர் விகிதம் 97.20 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.








