முக்கியச் செய்திகள் தமிழகம்

வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கிலோ தலைமுடி கட்டி!

ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட மாணவியின் வயிற்றில் இருந்து 1 கிலோ முடியாலான கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் அகற்றியுள்ளனர்.

விழுப்புரம் நகர பகுதியை சார்ந்த பள்ளி மாணவி தனது தலை முடியை கடந்த ஒரு வருடங்களாக சாப்பிட்டு வந்ததால் வயிற்றில் 1 கிலோ எடை கொண்ட முடியாலான கட்டியாக உருவாகி சிறு குடல் வரை பரவியுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட முடியால் ஆன கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றியுள்ளனர். கட்டியின் நீளம் 100 செ. மீ அளவிற்கு வயிற்றியில் உருவாகி இருந்துள்ளது.

15 வயதுடைய அந்த மாணவி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வருகிறார். அவரது பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் அம்மாணவி, தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்த சூழலில் அவருக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.

உடனே அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த வாரம், அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றினர்.

மருத்துவர் மகேந்திரன்

இந்த கொரோனா சூழ்நிலையில் குழந்தைகளை பெற்றோர் தனிமையில் விடாமல் விளையாட்டுகள் மூலம் உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் அடிக்கடி பிள்ளைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டால் கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வு உலகத்திலேயே 60 இடங்களில் நிகழ்ந்துள்ளதாகவும், முடியை பிய்த்து சாப்பிடுவதால் வாய்ந்தி, மயக்கம், வயிற்று வலி பசியின்மை அடிக்கடி ஏற்பட்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்த விநோத நோய்க்கு ‘Hair Eating Disorder’ என பெயர்.

நாள் கனக்கில் இதே நிலை தொடர்ந்தால் உணவு குழாய் பாதையில் அடைப்பு ஏற்பட்டு செரிமான பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்பு நேரக்கூடும் என்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ மகேந்திரன் தெரிவிக்கின்றார்.

Advertisement:

Related posts

பிரசித்தி பெற்ற கோவை சாய்பாபா கோவிலில் 78வது வருட மகா தரிசன விழா!

Niruban Chakkaaravarthi

அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

எல்.ரேணுகாதேவி

நாளை யூரோ கோப்பை அரையிறுதி : ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதல்

Vandhana