டெல்லியில் மரச்சாமான்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி, கிர்ட்டி நகர் பகுதியில் மரச்சாமான்கள் மற்றும் நாற்காலி விற்கும் கடை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. மரக்கடையில் பற்றிய தீயானது வேகமாக அருகில் இருக்கும் இடங்களுக்கு பரவத்தொடங்கியது. உடனடியாக இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ச,ம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







