முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

8-வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி

8 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது தாம் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விடுகிறார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஹோலி பேட்டி என்ற சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு உதவ முன்வந்த டிம் சவுத்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றபோது தாம் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட இந்த ஜெர்சி, ஜூலை 8ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இதன் மூலம் பெறப்படும் தொகை முழுவதும், சிறுமியின் மருத்துவ செலவுக்கு அளிக்கப்படும் என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம்!

நாளை முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் வரவு வைக்க‍லாம்: ஆர்பிஐ அதிரடி உத்த‍ரவு

Ezhilarasan

சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடல் டீசரை வெளியிட்ட யுவன்!

Ezhilarasan