“விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்” – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.  மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட நிதி…

விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

“விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்.  மாநில அரசுகள் தான், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதால், மாநிலங்கள் இந்த திட்டத்தின் இலக்கை அடைய ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.  இந்த நூற்றாண்டானது, தொழில்நுட்பம் மற்றும் புவியியல் மாற்றங்களுக்கானது. இவை அனைத்துமே நமக்கான வாய்ப்புகள்.  இந்த மாற்றங்களை இந்தியா தனது முன்னேற்றப்பாதைக்காகப்  பயன்படுத்திக்கொண்டு, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

இது இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை மைல்கல்லாக இருக்கும். வரும் 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படும்.  மத்திய அரசின் திட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதே இலக்கு” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.