முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

மூச்சுத்திணறல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததை அடுத்து மூச்சுத் திணறல் பிரச்சினைக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது

இந்நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு ஓய்வில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்றும், யாரையும் சந்திக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

Gayathri Venkatesan

சூனா பானா ஸ்டைலில் ஆடு திருடிய தம்பதி!

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Karthick