கொரோனாவுக்கு வீட்டிலிருந்தப்படியே பரிசோதனை!

கொரோனா நோய் தொற்றை வீட்டிலிருந்தப்படியே எளிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் கருவிக்கு, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த…

கொரோனா நோய் தொற்றை வீட்டிலிருந்தப்படியே எளிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் கருவிக்கு, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

புனேவை தலைமையிடமாக கொண்டு மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் கொரோனா தொற்றை சுயமாக வீட்டிலேயே கண்டறிவதற்கான கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதற்கு ‘கோவிசெல்ப் கிட்’என பெயரிட்டுள்ளது. இந்த கருவி கையடக்க அளவில் காணப்படும் என்றும் இதற்கான விலை ரூ.450 எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த கருவியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்று கொள்ள இயலும் என்றும் தெரிவித்தது.

கொரோனா அறிகுறி கொண்டவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே இந்த கருவியை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் நடவடிக்கையாக, ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவி கருதப்படுகிறது. இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.