தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்கிறார்.

தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி தொகுதி பேச்சுவார்த்தை உள்ளிட்டவை முடிவுற்ற நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன் படி திமுக சார்பில் ஒரே கட்டமாக 164 வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

அதிமுக தரப்பில் இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தரப்பில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தீவிர பிரசாரத்திலும் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்கிறார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 30) தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.