முக்கியச் செய்திகள் மழை

கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

மரக்காணத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்தது வந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்று வட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், மரக்காணம் அடுத்த கரிபாளையம் பகுதியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது.

பெரும்பாலும் இப்பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் கதிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி நாசமாகியுள்ளது. நெற்பயிர்களில் மழைநீர் தேங்கி வெளிவராமல் இருப்பதற்கு அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உடனடியாக அதிகாரிகள் வந்து விவசாய நிலங்களை பார்வையிட்டு வடிகாலை தூர்வார வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

முகநூலில் ட்ரெண்டாகும் தற்கொலை குறித்த விழிப்புணர்வு பதிவு.

Halley karthi

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

Ezhilarasan

மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!