உ.பி: தலித் சிறுமி மீது சரமாரி தாக்குதல்-அதிர்ச்சி வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்கள் கொண்ட குடும்பத்தினர் சிறுமையை படுக்க வைத்து அவரது கால்களில் லத்தியைக் கொண்டு தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுமி மீது திருட்டு சந்தேகம் கொண்டே இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, இது சம்பந்தமாக போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமேதி காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

https://twitter.com/amethipolice/status/1475897054547243011?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475897054547243011%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fvideo-dalit-girl-tortured-by-a-family-accused-of-theft-in-amethi-shocker-2677490

இந்த வீடியோவில் சிறுமி அலறுவதையும், தாக்கும் நபர் சிறுமியின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளுவதையும் காண முடிகிறது. மட்டுமல்லாது வலியில் துடித்த சிறுமி அழுதுக்கொண்டே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுவதையும் தெளிவாக கேட்கமுடிகிறது.

அமேதி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸ்மிருதி இராணி இச்சம்பத்திற்கு அதிருப்பதி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரியங்கா காந்தி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்க எதிராக நாளொன்றுக்கு தலா 34 மற்றும் 135 குற்றங்கள் நடைபெறுவதற்குதான் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுட பயிற்சி வழங்கப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

https://twitter.com/priyankagandhi/status/1476073591812722688

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரைவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.