கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி: வடகொரிய அதிபர் கிம்

கொரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா அமோக வெற்றி பெற்றதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா நோயை அங்குள்ள சுகாதாரத்…

கொரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா அமோக வெற்றி பெற்றதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா நோயை அங்குள்ள சுகாதாரத் துறையினர் சாதாரண காய்ச்சல் என்று மட்டுமே பதிவு செய்தனர். இதனால், அங்கு கொரோனாவால் ஏற்பட்ட இறப்பு குறித்த தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் அங்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. தலைநகர் பியோங்யாங்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த வடகொரியாவின் சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம். இதற்கு காரணமானவர்களைப் பாராட்டுகிறேன் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.