செஸ் போட்டிக்காக பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு கொண்டனர். போட்டியின்…

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை உலக செஸ்
ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த
2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு கொண்டனர். போட்டியின் போது விளையாட்டு
வீரர்கள் தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து செல்லும் போது அவர்களின்
பாதுகாப்புப் பணிக்காக 4000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு பணியில்
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி படா
கானா கறி விருந்து வைத்தார்.

மேலும் காவலர்களுடன் ஒன்றாக அமர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உணவருந்தி செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உணவு பரிமாறினார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு உணவு பரிமாறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவலர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

படா கானா விருந்து என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து நடைமுறையில்
இருக்கிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு காவல்துறை உயர்
அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
சோர்வாக இருக்கும் காவலர்களுக்கு இது அந்த அந்த மாவட்ட உயர் அதிகரிகளால் ஒரு
சிறப்பு நிகழ்வாக செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.