மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை

மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வருவதால் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இப்போதைய சூழலைப் பார்க்கும்போது தெலங்கானாவில் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ராஜஸ்தானில் கடுமையான போட்டி இருக்கும். ஆனால், அங்கு வெற்றி பெற முடியும் என நினைக்கிறோம். அதே நேரம் மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் எங்கள் வெற்றி நிச்சயம்.

கவனத்தை சிதறடிப்பதன் மூலமே பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது என்ற மிக முக்கியமான பாடத்தை கர்நாடகாவில் நாங்கள் கற்றுக்கொண்டோம்.

பாஜக எம்.பி.க்கள் ரமேஷ் பிதுரி, நிஷிகாந்த் துபே ஆகியோரின் செயல்பாடுகள் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற எண்ணத்திலிருந்து திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களின் அடிப்படை என்பது பாஜகவுக்கு தெரியும்.

இதையும் படியுங்கள் : ஐ-போன் உதிரிபாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!

நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை ஒவ்வொரு முறை கையில் எடுக்கும்போதும், நம்மை திசைதிருப்ப இதுபோன்ற யுக்திகளை பாஜக பயன்படுத்துகிறது. அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இப்போது நாங்கள் கற்றுக்கொண்டோம். நிச்சயம் 2024 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிப்போம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.