கண்ணாடி பாட்டிலில் பால் விற்க கோரிய வழக்கு – விரைவில் விசாரணை…

பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய கோரிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது…

பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய கோரிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா
பாக்கெட்டில் விற்பனை செய்ய உத்தரவிட கோரி தென் மண்டல தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், பால் பொருட்களை விற்பனை செய்யும் பிளாஸ்டிக் மக்கும் தன்மை அற்றவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக போதுமான வசதிகள் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.