பல் வலிக்கு சென்ற நபரிடம் 10 லட்சம் ரூபாய் ஏமாற்றி மொத்த பற்களையும் பிடுங்கிய மருத்துவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பல் வலிக்கு சிகிச்சை மேற்கொள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பல் பிடுங்குவதற்காக முதல்கட்டமாக 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தாடை அறுவை சிகிச்சை செய்து 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனக்கு மருத்துவம் பார்த்தவர் மருத்துவர் இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் மனு அளித்துள்ளார்.







