ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள்தான் வெற்றி பெற போகிறோம், மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 1519 பயனாளிகளுக்கு 937 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு , தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்கான பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம். தொடர்ந்து அனைத்து அமைச்சர் பெருமக்களும் ஈரோடு வர உள்ளார்கள். அங்கு வந்து ஒன்னரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க இருக்கின்றோம். ஈரோடு நகரத்தைப் பொறுத்த அளவில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம்.
திமுக நல்ல நிலையில் இருக்கின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் அவராகவே தோழமைக் கட்சிக்கு இந்த தொகுதியை விட்டு தந்து கட்சியின் மாண்பை காத்திருக்கிறார். நாங்கள் இப்பவே அறிவிச்சிட்டோம். ஈரோடு தொகுதியில் நாங்கள் தான் ஜெயிக்கப்போறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பி.ஜேம்ஸ் லிசா