முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடியரசு தின ஆளுநர் தேநீர் விருந்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் மதவெறி கும்பலிடமிருந்து பாதுகாத்திட ஜனவரி 26-ம் தேதியை “இந்திய அரசியல் அமைப்புச்சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு” தினமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தேநீர் விருந்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“தமிழ்நாடு ஆளுநர்” என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தாலும் அவர் தன் அரசியல் அமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் சார்பு கருத்துகளையே பேசி வருகிறார்.

எனவே, அவர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு புறக்கணிக்கின்றது. மேலும் ஜனவரி 26-ம் தேதியன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளிலும் தேசிய கொடியை ஏற்றி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெறும் என்பதையும் இந்திய கம்யூனிஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அறிவிக்கின்றது. இவ்வாறு முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

Jayapriya

கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை- சென்னை மாமன்ற கூட்டத்தில் எழுந்த குற்றச்சாட்டு

Web Editor

மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

EZHILARASAN D