சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று 08:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது தெற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை (26.10.2026) மேலும் வலுப்பெற்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் 27.10.2026 காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
• நேற்று (24-10-26) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (25-10-26) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது.
• சுமார் 3.1 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன்காரணமாக இன்று இரவு 7 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன் முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




