நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 : இந்திய அணி அபாரம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சா்ச் நகரில் இன்று நடைபெற்றது

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 3 சிக்ஸர்கல், 8 ஃபோர்களுடன் 40 பந்தில் 82 ரன்கள் குவித்தார். ஃபின் ஆலன் 45 ரன்களும், ஜேக்கப்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். இதிய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், மயங்க் அகர்வாள், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 4 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் விளையாடிய புவனேஷ்வர் குமார் விக்கெட் எதுவும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார்.

இதனைத்திடர்ந்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய ஆணி களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் நியூசீலாந்தின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதரடித்தனர். இருவரது பார்ட்னர்ஷிப் 93 ரன்கள் குவித்த நிலையில் அபிஷேக் ஷர்மா 29 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் அரைசதத்தை கடந்தார். இதனைத்தொடர்ந்து வந்த 4 சிக்ஸர்கள், 8 ஃபோர்களுடன் 33 பந்தில் 67 ரன்கள் எடுத்த நிலையில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்தார், இதனையடுத்து வந்த ஷ்ரேயஸ் அய்யர் 42 ரன்களும், அக்சர் படேல் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த நமன் திர் ஆதிரடியாக ஆடி 15 பந்துகளில் 42 ரன்கள் குவ்வித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.

இறுதியில் 19.4 ஓவர்களில் 230 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.