வேலை தேடி அலையும் இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிரச்சார பயணத்திற்காக போடப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி கொடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தங்களுக்கு கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளதாகவும், அதற்காக அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆர்வத்தை மக்கள் பணியிலும் காட்டிருந்தால், தாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.







