முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரம் ; தடயவியல் சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் , மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவுகளா அல்லது விலங்குகளின் கழிவுகளா என்பதை ஆராய அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர்
ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்டர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் நலன்களை
பாதுகாப்பதற்காகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எடுத்து வரும் தொடர்
நடவடிக்கையின் காரணமாக நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மத்தியில் ஆணையத்தின் மீது மிகுந்த எதிர்பார்த்து கூடியிருக்கிறது.

21ம் நூற்றாண்டில் கூட  சாதிய பாகுபாடுகள் இருப்பது வருத்தத்திற்குரியது.
அவற்றைக் களைய பொதுமக்களிடம் விழிப்புணர்வுகள்  ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் பத்திரிகைகளின் கடமையும் இன்றியமையாதது .

இன்று ஆணையத்தின் முன்பு 13 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவற்றில் பத்து
வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மூன்று வழக்குகள் மீது அடுத்து வரும் கூட்டத்தில் ஆணையம் தீர்ப்பு அளிக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவுகளா அல்லது விலங்குகளின்
கழிவுகளா என்பது குறித்து தெரிந்து கொள்ள அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு
தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற பொழுது மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அருகே உபயோகத்தில் இருந்த தொலைபேசி எண்களை கண்டறிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்  இரட்டை குவளை முறை, கோவிலுக்குள் பட்டியல் இன மக்களை  அனுமதிக்காதது
தொடர்பாக   முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் மீதமுள்ளவர்களை
தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய சொத்துக்களை இணைக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அதை நோக்கி நகரும்.” என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Halley Karthik

உலக கோப்பை கால்பந்து; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா கால் இறுதிக்கு முன்னேற்றம்

G SaravanaKumar

ஐபிஎல் ரத்து: நாட்டுக்குத் திரும்பிய 8 இங்கிலாந்து வீரர்கள்!

Halley Karthik