அமெரிக்காவின் முதல் சீக்கிய பெண் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் பதவியேற்பு

இந்திய வம்சாவளியைச் சார்ந்த சீக்கிய பெண் மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்தியர்கள் உலகம் முழுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தை தேடி…

இந்திய வம்சாவளியைச் சார்ந்த சீக்கிய பெண் மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இந்தியர்கள் உலகம் முழுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தை தேடி புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்க ,  ஐரோப்பிய  மற்றும் அமீரக நாடுகளில் கனிசமாக வாழ்ந்து வருவதோடு இந்திய நாட்டிற்கு பெருமிதம் தேடித் தரும் வகையில் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஹொஸ்டன் நகரத்தில் பிறந்து வளர்ந்த  மன்பிரீத் மோனிகா சிங் இந்திய வம்சாவளியை சார்ந்தவர். 1970 கால கட்டத்தில் மோனிகாவின் தந்தை அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். சட்டம் பயின்ற மோனிகா சிங் 20 வருடங்களாக வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவிலான பல மனித உரிமை சார்ந்த வழக்குகளை மோனிகா சிங் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியா என்கிற அந்தஸ்த்தை பெறுகிறார்.

இதுகுறித்து  பதவியேற்பு விழாவில் மன்பிரீத் மோனிகா சிங்  கூறும்பொழுது..

“நீதிபதியாக பதவியேற்றது  மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் நான்  ஹோஸ்டன் டவுனை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.