‘சிக்கன் பீஸுடன் சைவ உணவு’… குமுறிய பயணி – பதிலளித்த ஏர் இந்தியா!

சைவ உணவின் சிக்கன் துண்டுகள் கிடந்ததால் ஆத்திரமடைந்த ஏர் இந்தியா பயணி, இதனை பற்றி தனது  எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அதற்கு பதிலளித்துள்ளது.  வீரா ஜெயின் என்ற பெண்…

சைவ உணவின் சிக்கன் துண்டுகள் கிடந்ததால் ஆத்திரமடைந்த ஏர் இந்தியா பயணி, இதனை பற்றி தனது  எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அதற்கு பதிலளித்துள்ளது. 

வீரா ஜெயின் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார்.  அப்போது அவருக்கு வழங்கப்பட்ட  சைவ உணவில் சிக்கன் துண்டுகள் கிடந்துள்ளன.  அவர் இதுகுறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.  அதில் “நான் ஏர் இந்தியா விமானத்தில் கோழிக்கோட்டில் இருந்து மும்பை சென்றேன்.

அந்த விமானம் மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டது.  அந்த விமானத்தில் எனக்கு சிக்கன் துண்டுகளுடன் சைவ உணவு வழங்கப்பட்டது.  இது பற்றி நான் மேற்பார்வையாளரிடம் தெரிவித்த போது அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்திருத்தார்.

இதையும் படியுங்கள்: புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

இந்த பதிவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் பதிலளித்துள்ளது.  அதில் “அன்புள்ள ஜெயின், நீங்கள் உங்கள் பதிவை நீக்கி விட்டு,  எங்களிடம் நேரடியாக புகார் அளியுங்கள்.  கண்டிப்பாக நாங்கள் அதை சரி செய்கிறோம்.  நீங்கள் இவ்வாறு பொது வெளியில் பதிவிட்டால் அது தவறாக பயன்படுத்த பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.