கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆடி அமாவாசையையொட்டி தொடங்கிய வாவுபலி விவசாய பொருட்காட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி
அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டு குழித்துறை நகராட்சி சார்பில் 98 வது ஆண்டு துவக்க விழா நடைபெற்ற நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையில் மறைந்த முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்வு வரும் 15 தேதி அன்று நடைபெறுகிறது.
மேலும் இந்த பொருட்காட்சி மற்றும் பலி தர்ப்பண நிகழ்வில் பங்கேற்கும் மக்களுக்கு சிறப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ள நிலையில், தினம் பொருட்காட்சி திடலில் தமிழக கேரளா மக்கள் பல்லாயிரக்கணக்கானோா் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ரூபி.காமராஜ்






