தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக பெண்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
துாத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேரலாயத்தில் தங்க தேர் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஏழாம் நாளான நேற்று உலகிலுள்ள அனைத்து பெண்களின் நன்மைக்காகவும், பாதுகாப்புக்காவும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், அருள் சகோதரிகள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு சென்றனர்.
—அனகா காளமேகன்







