பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்,

விழுப்புரம் அருகேயுள்ள சாலை அகரம் கண்ணப்பன் நகரில் விக்கிரவாண்டியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் அருள் பிரதா ஆவார் . இவர் சமீபத்தில்  வீட்டு மனை ஒன்று வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்ய அண்ணாமலை, சாலை அகரம் கிராம நிர்வாக அலுவலர் சதிஷை அனுகியுள்ளனர்.

அப்போது பாட்டா மாறுதல் செய்ய சதீஷ் 20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று  கேட்டதாக கூறப்படுகிறது.  லஞ்சம் கொடுக்க விரும்பாத  அண்ணாமலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரியிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் இன்று அண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் சதீஷிடம் பட்டா மாறுதல் செய்ய சாலை அகரம் பெட்ரோல் பங்க் அருகில் 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சதிஷை கையும் களவுமாக பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.