நெல்லை – சென்னை உட்பட நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்கள் என நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நெல்லை – சென்னை இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : ”மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது எனது யோசனை!” – லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு
இந்த வந்தே பாரத் விரைவு ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும், வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.