28 C
Chennai
December 7, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று தொடங்கும் நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை; சிறப்பம்சங்கள் என்னென்ன?

நெல்லை – சென்னை இடையே தொடங்கவுள்ள வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…

  • பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில், ஏசி பெட்டியில் 78 இருக்கைகளும், எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் 52 இருக்கைகளும் என, மொத்தம் 535 இருக்கைகள் உள்ளன.
  • குளிரூட்டி வசதி கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு எல்இடி டிவிக்கள், முதலுதவி பெட்டி அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜர் வசதி உள்ளன.
  • ஓட்டுநர், அதிகாரியை அவசரத்துக்கு தொடர்பு கொள்ள டிஜிட்டல் மைக் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
  • புகைப் பிடித்தால் எச்சரிக்கும் கருவி, கையால் தொட்டால் எரியும் மின் விளக்குகள்,  தானியங்கி டிஜிட்டல் கதவுகள் இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன.
  • எக்ஸிக்யூட்டிவ் பெட்டியில் 180 டிகிரியில் திரும்பக் கூடிய வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு கழிப்பறை வசதி, கைக்குழந்தையை பாதுகாப்பாக அமர வைக்க, தனி இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு இருக்கைகள் முன்பகுதியிலும் மேஜை போன்ற வசதி அமைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து பெட்டிகளிலும் உதவியாளர் மூலம் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • வளைவான பகுதியில் வெளிபுறத்தைக் காணும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு பெட்டியிலும் இன்ஜின் பொருத்தி இருப்பதால், துரித வேகம் கிடைக்கும் என்பதால் சுமார் 8 மணி நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்குப் போகலாம்.
  • நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையை சென்றடையும்.
  • சென்னையில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
  • வந்தே பாரத் ரயிலில் சாதாரண ஏசி இருக்கைக்கு 1,610 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி இருக்கைக்கு 3,005 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy