50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில்  வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்  சென்னையை சார்ந்த பெண் மென்பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல்…

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில்  வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்  சென்னையை சார்ந்த பெண் மென்பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த 18 பேர் உதகைக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். நேற்று உதகையை சுற்றி பார்த்து விட்டு கல்லட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்க சென்றுள்ளனர். அப்போது 15-வது கொண்டைஊசி வளைவு பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் 14 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் ஓட்டுநர் உட்பட19 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த 24 வயது முத்துமாரி என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த அனைவரும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.

குறிப்பாக கல்லட்டி மலைப் பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்ல தடையுள்ளதால், இதனை கவனிப்பதற்காகவே அங்கு காவல் சோதனைச் சாவடி உள்ளது. இந்நிலையில் சுற்றுலா வந்த பெரிய வேனை மாற்று மலைப் பாதையில் தடையை மீறி கூட்டிச் சென்ற விடுதி ஊழியர் மீது புதுமந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட புதுமந்து மலைப்பாதையில் டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா விடுதி ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில் விடுதிக்கு அழைத்துச் செல்லும் காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.