முக்கியச் செய்திகள் தமிழகம்

வடிவேலு பாணியில் விழிப்புணர்வு பிரசாரம்; கூத்தாநல்லூர் நகராட்சிக்குக் குவியும் பாராட்டு!

பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் வடிவேலுவின் கைப்புள்ள காமெடியை வைத்து புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், மக்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் தூய்மையாகப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. மேலும், தூய்மை பாரதம், என் குப்பை என் பொறுப்பு என பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சில பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தொடர்வதால். இதனைத் தடுப்பதற்காக கூத்தாநல்லூரில் அதிக குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூய்மை செய்யப்பட்ட பகுதியில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் நடிகர் வடிவேலு கைப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்த நகைச்சுவை காட்சியை நினைவு கூறும் வகையில் கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த விளம்பர பதாகையில் “இந்த இடத்திற்குக் குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்” என்ற வாசகத்துடன் கைப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் கார்ட்டூன் படங்களும் இடம்பெற்றுள்ளது. தூய்மை குறித்த இந்த விளம்பரம் அவ்வழியாகச் செல்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அண்மைச் செய்தி: ‘அல்கொய்தா தலைவரை ட்ரோன் மூலம் வீழ்த்திய அமெரிக்கா; குறிவைத்து வீழ்த்தப்பட்டது எப்படி?’

மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் பகிரப்பட்டு வருவதை அறிந்த கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் கூத்தாநல்லூர் பகுதியில் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இத்தகைய விளம்பர பதாகைகளை வைத்து தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜகவினரை கொரோனா நெருங்காது!

EZHILARASAN D

சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்

Web Editor

விஷ்ணு விஷாலின் “FIR” படத்துக்கு தடை ?

G SaravanaKumar