முக்கியச் செய்திகள் இந்தியா

ரூ.46 கோடி நிதி திரட்டி தம்பியை காப்பாற்றிவிட்டு அக்கா உயிரிழந்த சோகம்…

கேரளாவில் அரிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டிருந்த போதிலும்,  தனது தம்பியின் உயிரை காக்க சமூக வலைதளங்களின் மூலம் போராடிய சிறுமி அஃப்ரா உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மாட்டூல் பகுதியைச் சேர்ந்த அஃப்ரா, முதுகுத்தண்டு தசைச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அஃப்ராவின் சகோதரர் முகமதுக்கும் இதே முதுகுத்தண்டு தசைச் சிதைவு என்ற அரிய வகை நோய் இருப்பது தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நோயை குணப்படுத்த பல கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் 18 கோடி ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிவித்திருக்கின்றனர். ஏழ்மையில் வாடிய அஃப்ரா குடும்பத்தினருக்கு அவ்வளவு பெரிய தொகை என்பது எட்டாக்கனியாக இருந்தது. இதனால் மன வேதனை அடைந்த அஃப்ரா தனது தம்பியை காப்பற்ற சமூக வலைத்தளத்தை பயன்படுத்தினார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தமது தம்பிக்கு வந்திருக்கும் அரிய வகை நோய் குறித்து சமூக வலைதளங்களில் விளக்கி வீடியோ பதிவிட்டு உதவி கோரினார். சிறுமியின் வீடியோ இணையத்தில் பலரையும் சென்று சேர்ந்தது.தங்களால் முடிந்த தொகையை பலரும் அளித்து வந்த நிலையில் 46 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

அந்தப் பணத்தைக்கொண்டு, அஃப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி அஃபரா உயிரிழந்துள்ளார். தம்பியின் உயிரைக்காக்க பாசப்போராட்டம் நடத்திய அக்கா உயிரிழந்தது  பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டபோது அதனை நினைத்து முடங்கிவிடாமல், அதே போன்ற நோயால் பாதிக்கப்பட்ட தனது தம்பியின் உயிரை காக்க போராடிய அஃப்ராவின் செயல்  இணையவாசிகளை நெகிழ்ச்சியடையச் செய்தது. சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை பரப்புபவர்கள் மத்தியில் அஃப்ரா அதில் தனது தம்பிக்காக நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்ப்பிணி பெண் மீது கார் ஏற்றியவர் கைது

G SaravanaKumar

தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!

Vandhana

அனைத்து நாட்களிலும் வழிபாட்டிற்கு கோயில்கள் திறப்பு

Halley Karthik