முக்கியச் செய்திகள் உலகம்

அல்கொய்தா தலைவரை ட்ரோன் மூலம் வீழ்த்திய அமெரிக்கா; குறிவைத்து வீழ்த்தப்பட்டது எப்படி?

இரட்டை கோபுர தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவரும், அமெரிக்காவின் ஹிட் லிஸ்டில் இரண்டாம் இடத்திலிருந்தவருமான அல்- ஜவாஹிரி வீழ்த்தப்பட்டது எப்படி? என்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

உலகையே அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தால் காபூலில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் அறிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்கா கடந்தாண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு, ஆப்கானிஸ்தானிற்குள் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்குக் காரணமான அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன், 2011-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார் .அவரது இறப்பிற்குப் பிறகு அல்கொய்தா அமைப்பின் தலைவரான அல்-ஜவாஹிரி 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

அண்மைச் செய்தி: ‘இடப்பிரச்சனையைப் பூஜை மூலம் தீர்த்து வைப்பதாகக் கூறி 15 சவரன், ரூ.25 லட்சம் மோசடி’

அறுவை சிகிச்சை நிபுணரான அல்-ஜவாஹிரி எகிப்தின் கெய்ரோ நகரைச் சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் -அல்- சதாத் படுகொலையில் தொடர்புள்ளதாக அல் – ஜவாஹிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய அல்-ஜவாஹிரி, சோவியத் படைகளுடன் போரிட்டுக் காயமடைந்த இஸ்லாமிய முஜாஹிதீன் கொரில்லாக்களுக்கு மருத்துவ உதவி அளித்தார். அந்த சமயத்தில் தான் ஒசாமா பின்லேடனுடன் நெருக்கமானார்.

உலகையே உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலில் இவருக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜவாஹிரி 2001-ஆம் ஆண்டில் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட “அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள்” பட்டியலில் பின்லேடனுக்குப் பின் இரண்டாவது இடத்திலிருந்தார். அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகள், “ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்” எனத் தகவல் வெளியிட்டுள்ளனர். எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் காய்தா தீவிரவாத கும்பல் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விசாரணை கைதி உயிரிழப்பு; இதுவரை நடந்தது என்ன?

EZHILARASAN D

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்

G SaravanaKumar

நாள் ஒன்றுக்கு எத்தனை காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு? – காவல் ஆணையர் பதில்!

Gayathri Venkatesan