வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

‘விடுதலை பாகம் 2’ முடிந்ததுமே தொடர்ந்து வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி,  வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா…

‘விடுதலை பாகம் 2’ முடிந்ததுமே தொடர்ந்து வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி,  வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.  முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை – 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை அவர் துவங்குவார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், வாடிவாசல் படத்தின் திரைக்கதை பணிகளை முழுவதுமாக வெற்றிமாறன் முடித்து விட்டதாகவும், அதற்காக நடிகர் நடிகைகளிடம் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் புதிய தகவல் வெளியாகியது.  நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “விடுதலை இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததுமே மிக விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.