தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம், மக்களை உலுக்கி வருகிறது. முதல் அலையை விட வேகமாக…

கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம், மக்களை உலுக்கி வருகிறது. முதல் அலையை விட வேகமாக பரவும் கொரோனா 2-வது அலையால், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடுப்பூசி மையங்களுக்கு சென்று ஊசி போடுவதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.