பொருளாதாரப்புயலில் நாடு ; மிட்டாய்களை விநியோகிக்கும் பிரதமர் – ராகுல் விமர்சனம்…!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் பிரதமர் மோடி மும்முரமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் இந்திய பிரதமர் மோடி தனக்கு மெலடி மிட்டாய் பாக்கெட்டை பரிசளித்ததாகவும் அதற்கு தான் நன்றி கூறியதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைக்கு மேல் ஒரு பொருளாதார புயல் வீசிக்கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம் தலைக்கு மேல் ஒரு பொருளாதாரப் புயல் சீறிக்கொண்டிருக்கிறது, ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார்!

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். ஆனால் பிரதமர் சிரித்துக்கொண்டே காணொளிகளை உருவாக்கி கொண்டிருக்கிறார். பாஜகவினரோ உடன் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது தலைமைத்துவம் அல்ல, இது ஒரு கேலிக்கூத்து” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.