முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில்களில் காலி பணியிடங்கள் முறைகேடுகளின்றி நிரப்பப்படும் – அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறைகேடுகளின்றி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஆய்வு நடத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் புதிதாக 450 கோயில்கள் தரம் உயர்த்தப்படவுள்ளதாக கூறினார். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைகேடுகள்
நிகழாமல் நிரப்படும் எனக்கூறிய அவர், தகுதியான பணியாளர்களுக்கு பதவி உயர்வு
வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Vandhana

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

Gayathri Venkatesan

உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

Saravana Kumar