முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது, பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, எதிர்கட்சியினரையும் அரவணைத்து செல்லும் நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக கூறினார்.எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள தமிழ்நாடு வீரர்களுடன் வாட்ஸ் ஆப் மூலம் பேசி வருவதாக கூறினார். தமிழ்நாடு வீரர்- வீராங்கனைகள் நிச்சயமாக பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







