உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம் நிலவுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 187 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோராக்பூரில் இறந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.







