முக்கியச் செய்திகள் இந்தியா

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கும் வகையில், அக்குழந்தையையும் அதன் தாயாரையும் ஹெலிகாப்ப்டரில் பயணிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானின், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த் (Nimbari Chandawatan) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமன் பிரஜபத். இவருக்கும் இவரது மனைவி சுகி தேவிக்கும் கடந்த மாதம் பெண்குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து சுகி தேவியும் அவரது குழந்தையும் ஹர்சோவ்லவ் கிராமத்தில் உள்ள சுகி தேவியின் பெற்றோரது வீட்டுக்குச் சென்றனர். இதைத்தொடர்ந்து சுகி தேவி மற்றும் பெண் குழந்தையை வரவேற்க அனுமன் பிரஜபத். ரூ. 4.5 லட்ச மதிப்பில் தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார். நிம்பரி சந்தாவந்த் கிராமத்திலிருந்து அனுமன் பிரஜபத் மற்றும் உறவினர்களும் ஹெலிகாப்டரில் ஹர்சோவ்லவ் கிராமத்திற்குச் சென்று அவர்களது பெண்குழந்தையும், தாய் சுகி தேவியையும் அழைத்துவந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்களது குடும்பத்தில் 35 வருடங்கள் கழித்துப் பிறந்த முதல் குழந்தையை வரவேற்க இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனுமன் பிரஜபத்தின் தந்தை மதன்லால் கும்ஹார் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஆண்குழந்தைகளை மட்டுமே வரவேற்கும் இச்சமூகத்தில் பெண்குழந்தையை வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் அமர்த்தி உள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் போலீஸார் தொடர் விசாரணை

Halley Karthik

ஈரோடு அம்மன் கோயில் திருவிழா: பக்தர்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு!

Jayasheeba

ஜீ5 ஒரிஜினலில் வெளியாகிறது சமுத்திரகனியின் ‘விநோதய சித்தம்’

Halley Karthik