மீண்டும் இணையும் தனுஷ்- மாரி செல்வராஜ் வெற்றிக் கூட்டணி!

கர்ணன் படத்தைத்தொடர்ந்து மீண்டும் மாரிசெல்வராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். இத்திரைப்படம் பாராட்டையும்…

கர்ணன் படத்தைத்தொடர்ந்து மீண்டும் மாரிசெல்வராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். இத்திரைப்படம் பாராட்டையும் விமர்சனத்தையும் ஒரு சேரப்பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், நடராஜன் சுப்பிரமணியன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள இயக்குநர் மற்றும் நடிகருமான லாலின் நடிப்பும், நடராஜன் சுப்பிரமணியனின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் மாரிசெல்வராஜுடன் இணைந்து பணியாற்றப்போவதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில்‘ கர்ணனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நான் மாரிசெல்வராஜுடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்குகிறது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.