25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்-க்கு மீண்டும் சிக்கல்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே ஆபாச நடிகைக்கு  பணம் கொடுத்த வழக்கில் சிக்கியிருந்த நிலையில், தற்போது வெள்ளை மாளிகையில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கின் பிடியும் இறுக தொடங்கியுள்ளது.

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக நிற்க டொனால்ட் ட்ரம்ப் ஆயத்தம் ஆகி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த அதிபரும் சந்தித்திராத வகையில் வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் ஆளாகியிருக்கிறார்.

டிரம்பின் மாளிகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 11000 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. அதில் சுமார் 100 ஆவணகள் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் எனக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள ட்ரம்ப் , தன் மீதான புகாரானது அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு அப்பாவி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு பைடனின் ஊழல் அரசால் தம் மீது இந்த குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

இந்த வழக்கு வரும் 15-ஆம் தேதி மியாமி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜராக உள்ளார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 100 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ட்ரம்ப் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

டிக்கெட் எடுக்காமல் பயணம் – காவலருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம்: வீடியோ வைரல்

Web Editor

சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

EZHILARASAN D

‘செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும்’ – அமைச்சர் மெய்யநாதன்

Arivazhagan Chinnasamy